காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் . தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021ம் ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வீரமாமுனிவர் விiயாட்டு மைதானத்தில் (25.12.2020) அன்று காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு போட்டி, கொரோனா விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பந்தை கிரிக்கெட் மட்டையால் அடித்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, அமைதியான காமநாயக்கன்பட்டி ஊர் சார்பாக இளைஞர்பெருமக்கள் கொரோனா விழிப்புணர்வு போட்டியாக இந்த கிரிக்கெட் போட்டி நடத்துவது பாராட்டுக்குறியது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த வந்துள்ள நிலையில் தற்போது புதுவிதமாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் அவற்றை எதிர்கொள...