தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் அமைச்சரிடம் கோரிக்கை மனு
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார்கள். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28.7.2020) மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். ...