முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 15, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரு.கீர்த்திமலர் அவர்கள் எழுதிய "தூங்கா இரவு" சிறுகதை நூல் குறித்த திறனாய்வு

 தொடுவானம் கலை இலக்கியப்பேரவையின் சார்பில் இன்று (08.10.23 )ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.மணி. தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தின் சித்தரை கூடத்தில் தூத்துக்குடி எழுத்தாளர் திரு.கீர்த்திமலர் அவர்கள் எழுதிய "தூங்கா இரவு" சிறுகதை நூல் குறித்த திறனாய்வு நடைபெற்றது. நூலை எழுத்தாளர் திரு.முகமது யூசுப்,திரு.பத்மநாதன் இருவரும் திறனாய்வு செய்து பேசினார்கள். திரு.செய்யது முகமது ஷெரீப்,புலவர் முத்துசாமி இருவரும் வாழ்த்துரை வழங்கினர். காதைக்களம் அன்பு சிறார் இலக்கியம் குறித்துப் பேசியதோடு சிறுகதை ஒன்றையும் கூறினார். மேலும் நிகழ்வில் திரு. தனசேகரன்,குறும்பட  இயக்குனர் அருந்ததி அரசு,தூத்துக்குடி நடிகர் சங்கத்தின் தலைவர் திரு.முருகேசன்,திரு.மாரிமுத்து,நாடக நடிகர் திரு.சக்திவேல் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.நூலாசியர் திரு.கீர்த்திமலர் ஏற்புரை வழங்கினார்.கவிஞர் ஆ.மாரிமுத்து அவர்கள் நன்றி கூறினார்.