*தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.* சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 11-03 - 2023 வெள்ளியன்று தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் இணைந்து மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது நடந்த இந்த போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் மலர்விழி , தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முஹம்மது நசீர், ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மகளிர் மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்ட...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !