12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி
நாள்: 26.06.2023 தூத்துக்குடி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் விடுதியில் தங்கி படித்தல் போன்ற உதவிகள் செய்து தரப்படும். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியானது முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை 27.06.2023 அன்று செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்ப...