தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல்கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 வரை வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல் கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர), இரண்டாம் கட்டமாக 21.09.2020 முதல் 26.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 28.09.2020 அன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. சுமார் 4,38,655 குழந்தைகளுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது. அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படும் இடங்களில் உணவிற்கு பின்பு காலை 9 மணிமுதல் 4 மணி வரை அனைத்து குழந்தைகளுக்கும...