முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 3, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் ----------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல்; இன்று மாலை வீச உள்ளது எனவும், இந்த சமயத்தில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மிக அவசிய தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் கன மழையின் காரணமாக நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்ல வாய்ப்புள்ளது எனவே நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். புயலின் காரணமாக கடல் கொந்தளிப்பு வாய்ப்புள்ளதால் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம். கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மின்கம்ப...