முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 12, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம்* நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிறைய கலியாவூர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் வரக்கூடிய பாதையான  கொம்புகாரநத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 15 .3 .2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி சாருஸ்ரீ இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான  சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். சென்னையில் இன்று (10.03.2022) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21.12.2021 அன்று 21 கிலோ ஹெராயின் உட்பட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கட்டுபடுத்தி போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ...