**மூச்சுக் பயிற்சி “ஸோ”, “ஹம்* "ப்ராணயாமம்" இடது நாசியில் ஓடும் சுவாசம் இடகலை, வலது நாசியில் ஓடும் சுவாசம் பிங்கலை, இரண்டு நாசியிலும் ஒரே நேரத்தில் ஓடுவது சுழுமுணை.. மூச்சை உள்ளே இழுப்பது பூரகம், சுவாசித்த காற்றை உள்ளே நிறுத்துவது கும்பகம், அந்த காற்றை வெளியே விடுவது ரேசகம். இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனிவரும் தகவல்களை அணுகிட வேண்டுகிறேன். மூச்சுக் கலையின் முதல் படி உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதுமதான். அந்த வகையின் இன்று எளிய பயிற்சி முறை ஒன்றை பார்ப்போம். இந்த பயிற்சியினை முதலில் ஐந்து நிமிடங்கள் என ஆரம்பித்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம். முப்பது நிமிடங்கள் செய்ய முடிந்தால் நல்லது. வெறும் வயிறுடன் அல்லது உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் செய்வது உத்தமம். தனிமையான இடத்தில் உடல தளர்வாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகுத் தண்டு நேராய் இருத்தல் அவசியம். பத்மாசனம் அல்லது சுகாசனம் உகந்தது. இப்போது வெறுமனே மூக்கின் வழியே சுவாசம் உள்ளே சென்று வெளியே வருவதை மட்டும் கவனியுங்கள். ம...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !