முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 21, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாராட்டு

            தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த 17.06.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்ற பின்னணி உள்ள 3 போக்கிரிகள் மற்றும் ஒரு எதிரியை கைது செய்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சங்கர் என்பவரை கொலை செய்ய முயன்ற எதிரிகள் மூவர...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி  வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி கிராமத்தில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.   ----------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சியும், உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி பகுதியில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (20.06.2021) நடைபெற்றது.       ...