தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கின் எதிரிகளை போலீஸ் காவலுக்கு எடுத்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான 45 பவுன் தங்க நகைகளை மீட்ட சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர், காவலர்கள் சதீஷ் மற்றும் திவான் பாட்ஷா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வழக்கின் எதிரிகள் 2 பேரை கைது செய்தும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 70 வழக்குகளை லோக்அதாலத் நீதிமன்றத்தில் முடித்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், முதல் நிலை காவலர் அனுசங்கர் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காக...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !