முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 24, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூய்மை பாரதம் குறித்து. அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

  தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. --------------------------- தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (23.04.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எல்லா உள்ளாட்சிகளுக்கும் தமிழகம் தூய்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகம் தூய்மை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எல்லா அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தில...