தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - பெண்ணை மீட்டு ஒப்படைத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. சென்னை முகப்பேரில் உள்ள வுhந டீயலெயn என்ற சமூக சேவை அமைப்பில் பணிபுரியும் மானஷா என்பவர் தங்களது பராமரிப்பில்; மாயா என்ற பெண் இருப்பதாகவும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மாயாவின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கக்கோரி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் பெண் தலைமைக் காவலர் திருமதி. அலாய்ஷியஸ் ரொசாரி மேக்ஸினா மற்றும் காவலர் திரு. ஆறுமுக ந...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !