முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 11, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு  ----------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.10.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 3ம் கேட் பாலம் என்பது மிகவும் சிக்கலான பாலம். இந்த பாலமானது தூத்துக்குடி ரயில்வே கேட்டுக்கு வடபுறமும், தென்புறமும் இணைக்கக்கூடியது. இந்த பாலத்தினை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.  இந்த பாலத்தில் மொத்தம் 12 டெக்குகள் உள்ளது. ஓவ்வொரு டெக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 டெக்குகள் பழுதடைந்து சீல்; செய்யும் நிலை ஏற்பட்டது. இப்பழுதினை கண்டுபிடித்து கடந்த 2ம் தேதியில் இருந்து சீரமைப்பு பணியை செய்து வருகிறார்கள். பணிகள் முடிந்துவிட்டது. இரண்டு இணைப்புகளுக்கு இடையே ரப்பர் பொறுத்தப்ப...