முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 9, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி சார்பில் ரூ 30 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரியூட்டிகள்

 09-06-2021  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி   சார்பில் செயலாளர் திரு டி. ஆர் .கோடீஸ்வரர் அவர்கள் ரூ 30 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன்  செறியூட்டிகளை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.  கீதா ஜீவன் அவர்களிடம் வழங்கினார்  அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு .கி .செந்தில்ராஜ் இ.ஆ.ப. -  உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு  ஸ்ருத பஞ் ஜெய் நாராயணன் இ.ஆ.ப. சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி  உறுப்பினர் திரு பிபுல் ஜெயின் ஆகியோர் உள்ளனர்

"தமிழன்டா " கலை குழு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் நிவாரண உதவி

  தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு 08-06-2021  அன்று புதியம்புத்தூர் கனி மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என 100 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அட...

தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு. சிலை அமைக்கவும் அவரது நினைவு போற்றும் வகையில் அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்ய இன்று ஆய்வு

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  -------------------------------  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை மற்றும் இடைசெவல் கிராமத்தில்; அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நட...

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை : மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் குழந்தைகள் 2020ம் ஆண்டு மார்சஃஏப்ரலில் நடைபெற்ற 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசுத் தொகையும், அதே போன்று அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.  அதன்படி 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர்கள் திருமதி. சுந்தரி மகன் சுப்பிரமணி, திரு. எபனேசர் மகன் டேவிஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் மகள் நிதிஷா, தலைமைக் காவர்கள் திரு. மாதவன் மகள் நந்திகா தேவி, திரு. சுப்பிரமணியன் மகள் தன்யா ஸ்ரீ, திரு. சிவசங்கரன் மகள் சுஷ்மிதா, ...