முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 16, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்று ஊரடங்கு : வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு,

 ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.  தற்போது பரவி வரும் ஒமைக்ரான் கொரோன பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இன்று (16.01.2022) ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்; 68 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1500 போலீசார் வாகன தணிக்கை மற்றும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (16.01.2022) குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கபசுரக...