தி.மு.க.சார்பில் முடிவைதானேந்தலில் ஊராட்சி சபை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன. இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முற...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !