தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில். 1.71 கோடி மதிப்பிலான கடன் உதவி. அமைச்சர் கடம்பூர் ராஜீ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் வானரமுட்டியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் 315 மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனி நபர்களுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 102 நபர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார் -------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் வானரமுட்டியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.08.2020) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் 315 மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனி நபர்களுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான கடன் உதவிகள...