தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28) என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், தனது அடையாள அட்டையை பயன்படுத்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !