முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 26, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு " காமராஜர் " மஹாலில் கொரானா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*  *29-06-2021*  செவ்வாய்க்கிழமை  அன்று காலை *9-30* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு கொள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள்     கொடுக்கப்பட்டுள்ள   9443132119   என்ற   தனது வாட்ஸ் அப் எண்ணில்      தொடர்பு கொண்டு  தங்களுடைய பெயர் மற்றும்  செல்போன் என்னை  பதிவு செய்து கொள்ளுமாறு   பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்  "சுகன்யா S செந்தில் குமார் "    மேலும்  நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு  வழங்கும் மாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்று (25.06.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி காப்பீட்டு திட்டத்தில் இணைக்கபட்டுள்ள தனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். எளிய மக்களுக்கு உதவிடும் திட்டமான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளுக்க...