தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என். கே மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (Village Vigilance Committee meeting) நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள என்.கே மஹாலில் இன்று (02.10.2020) கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்கள் உட்கார்ந்து, அவரவர் பகுதிகளில் உள்ளவர்கள் குழுவாக அமர்ந்து கலந்தாய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைவர், செயலாளர் போன்றெல்லாம் எதுவும் தேவையில்லை. இதில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டு, உங்கள் பகுதிகளில் குறைகள் என்னவென்பதை அறிந்து, பொதுவான நலன் சார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, உங்கள் பகுதி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துவதற்கான கூட்ட...