தூத்துக்குடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். கரோனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் வெளியில் செல்லும் போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. எனவே சம்பந்தபட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !