நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !
25-08-2018 சனிகிழமையன்று நீரை சேமிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம் தூத்துக்குடிரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மராத்தான் ஓட்ட நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் I.A.S , ரோட்டரி மாவட்ட ஆளுனர் K. ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில்... தூத்துக்குடி மாநகர காவல் துறை துணை கண்காளிப்யாளர் R. பிரகாஷ் முன்னிலையில், மராத்தான் ஒட்டம் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி யின் முன் காலை 6.45 தொடங்கிய ஒட்டம் தூத்துக்குடி w.G.C ரோடு வழியாக தூத்துக்குடி முத்துநகர் பீச் சை அடைந்தது. பின்னர் ஒட்டத்தில் முன் வந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மராத்தான் ஒட்டத்தில் மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ...