முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 30, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். -------------------------- தூத்துக்குடியில் போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற முகாம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து தலைக்கவசங்கள் வழங்கினோம்.  கடந்த மாதம் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த மாதம் கார், பேருந்து என அனைத்து ஓட்டுநர்களுக்கும் சாலை பாதுகா...