தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர் 8வது தெரு, டூவிபுரம் இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, மேலசண்முகபுரம் வன்னார் இரண்டாவது தெரு மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மேலும் இப்பகுதியில் எந்த ஒரு தளர்வும் அனுமதிக்க கூடாது எனவும், கொரோனா தடுப்பு பணிகளை இப்பகுதியில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டநபர்களின்தொடர்பாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் டூவிபுரம் நான்காவது தெருவில் அமைந்துள்ள சங்கரநாராயணன் பூங்காவில் மாநகராட்சி மூலம் காய்ச்சல் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஸ்பிக் ...