மாநில அளவிலான வூசு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில அளவிலான வூசு போட்டி 2022: கடந்த ஜனவரி மாதம் - 27, 28 தேதியில் நடைபெற்றது இந்த போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த S அருண் குமார் - 45 கிலோ உடல் எடை பிரிவிலும் . M. முத்துவேல் - 52கிலோ எடை பிரிவிலும் - தங்கப்பதக்கத்தையும் - S.அசோக்குமார் -28 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும்._ தினேஷ் பாலா - முத்துசூரிய ராகுல் ஆகியோர் 39 கிலோ எடை பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர் மாநில அளவிலான வூசு போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான வூசு போட்டிக்கு தகுதி பெற்றனர் இந்த மாநில போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.TV பேட்ரிக்ஸ் அவர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து கௌரவ படுத்தினார் ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !