முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 16, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

  தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களிடம் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2021) வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு 1 பகுதியை சேர்ந்த திரு.வனமல்லுசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 30) என்பவர் 13.5.2021 அன்றும், வைப்பாறு 1 கோட்டைமேடு ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த கோட்டைப்பாண்டி (வயது 55) என்பவர் 13.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தனர். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் தந்தை திரு.வனமல்லு...

தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்                         -------                                                       தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.05.2021) நடைபெற்றது. இம்முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமை துவக்கி வைத்து ...

மக்கள் பணிகள் சிறக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக. அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கு வாழ்த்து.

  கடந்த 14-5-2021 வெள்ளி அன்று  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக.  மாவட்ட தலைவர்P.மீராசா ஹாஜியார் தலைமையில்   மாண்பு மிகு சமூக நலத்துறை அமைச்சராக பொறுப் பெற்றுள்ள  N.கீதா ஜீவன் அவர்களை சந்தித்து  மலர்கொத்து வழங்கி   பொன்னாடை போர்த்தி மக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  . இதில் மாவட்ட தலைவர் P.மீராசா ஹாஜியார் அவர்களும், மாவட்ட பொருளாளர் -  திரேஸ்புரம் மீராசா அவர்களும், மாவட்ட துணை செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்களும்  கலந்து கொண்டு   வாழ்த்துக்களை தெரிவித்தனர்.                        இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்  கீதாஜீவன் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.