முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 23, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய அளவிலான வூசூ போட்டிக்கு. தூத்துக்குடி திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு

 தேசிய அளவிலான வூசூ  போட்டிக்கு தூத்துக்குடி  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு. கடந்த மாதம் 27 , 28 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசூ  போட்டியில்  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர்.  நாற்பத்தி ஐந்து கிலோ எடை பிரிவில் மாணவர்கள் அருண்குமார் தங்கப்பதக்கமும் , 52 கிலோ எடைப்பிரிவில் மாணவர் முத்துவேல் தங்கப்பதக்கமும், இருபத்தி எட்டு கிலோ எடைப்பிரிவில் மாணவர் அசோக்குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அண்டனி சாரால் ரோஸ் அவர்களும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர்கள் சாலமோன், சுடலை கண் ஆகியோர் கலந்து கொண்டனர் . பள்ளியின் தாளாளர் அவர்களும் மற்ற ஆசிரியப் பெரு மக்களும் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர் களையும் பாராட்டி கௌரவித்தனர்.  விழா ஏற்பாடுகளை பள்ளியி...

வெற்றி பெற்ற நாசரேத் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினருக்கு - தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க ! செயலாளர் SP.சண்முக நாதன் வாழ்த்து !

 நாசரேத் பேரூராட்சிக்கான வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது  இதில் 12-வது வார்டு உறுப்பினராக அ.தி. மு .க  சேர்ந்த ரவீந்திரன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவர்  சான்றிதழுடன் தூத்துக்குடி மாவட்ட  அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ஞானையா, நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், நாசரேத் கழக பிரமுகர் பெரியதுரை, கழக அவைத் தலைவர் சிவசுப்பு, நாசரேத் நகர இணைச் செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு, வார்டு செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை

  தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை கடந்த பெப்ரவரி மாதம் 14 முதல் 20-ஆம் தேதி வரை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சோலார் மாவட்டத்தில் தேசிய அளவிலான குடோ போட்டி  குடோ இன்டர்நேஷனல் பெடரேஷன் ஏற்பாடு செய்தது.        இந்த தேசிய அளவிலான போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் தமிழகத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்        குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 மாணவர்கள் பங்கு பெற்றனர் இதில் மாணவர்கள் எமில் சாலமோன் மற்றும் அஜித் குமார் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.     இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ம...