கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
}த்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மூலம்மாவட்டநிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது: தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்க...