தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். ------------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய 36 மாணவர்களுக்கும், 12 தொண்டு நிறுவனங்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையின...