ஈரான் நட்டிலிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த மீனவர்கள் இந்திய கப்பல் படை சேர்ந்த JALASWA கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வருகை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ஈரான் நாட்டில்; இருந்து இந்திய கடற்படைக்கு சேர்ந்த JALASHWA கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 687 மீனவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (01.07.2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு ஈரான் நாட்டில் இருந்து இந்தியகடற்படைக்கு சேர்ந்த JALASHWA கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 687 மீனவர்களை வரவேற்று, பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங் பணிகளையும் பார்வையிட்டார் . இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., ...