சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சாயர்புரத்தில் தூய்மை பணி. கடந்த 14-10-2022 வெள்ளி கிழமையன்று சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி சாயர்புரம் பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து தூய்மை இந்தியா பணியை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வார்டு கவுன்சிலர் திரு.கண்ணன், மேற்பார்வையாளர் திரு.நித்திய கல்யாண் உறுதிமொழி கூறினார். மாணவ மாணவிகள் சாயர்புரம் தெருவில் தூய்மை பணி செய்தனர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன், திரு.தாமஸ், திர...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !