முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்;டம் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

  தூத்துக்குடி மாவட்;டம் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் கூட்டரங்கில் இருந்து அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் திரு.குமார்ஜெயந்த், இ.ஆ.ப., அவர்கள் காணொலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (06.05.2021) ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் திரு.குமார்ஜெயந்த், இ.ஆ.ப., அவர்களிடம் விர...

அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் - முதலமைச்சராகப் பொறுபேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை.

அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் - முதலமைச்சராகப் பொறுபேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை. தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள்,நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1.தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும். 2.வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசி...