தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ------------------------- தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்டரங்கம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் 100 நபர்களுக்கும், கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 50 நபர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்கள். பின்னர் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !