உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் ; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.
துண முதல்வரும் மாநில இளைஞர் அணி செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு 28-11-2025 வியாழன் மாலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த பதினொரு குழந்தைகளுக்கு சமுகநலதுறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திருமதி கீதாஜீவன் தங்க மோதிரமும். இக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருதுவமணை உறைவிட மருத்துவர் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்