தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடு;போன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை சகாயம் மகன் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (வயது 31), ஸ்பிக் ஆலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் தனது குடும்பத்துடன் ஸ்பிக் குடியிருப்பில் "சி" பிளாக்கில் வசித்து வருகிறார். இந்நிலையில் 26.03.2020 அன்று மாலை வின்ஸ்டன் அந்தோணி சேவியர் தனது மனைவி ஜேசு சகாயம் மோனிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். வீட்டை பூட்டியவர் சாவியை, அங்கேயே எங்கோ ஒரு இடத்தில் விட்டுச் சென்றிருக்கிறார். சென்றவர்கள் மறுநாள் மாலை வீடு திரும்பியபோது சாவி இல்லாததால், இன்னொரு சாவியை வைத்து திறந்து வீட்டிலிருந்துள்ளார். அதன் பின்னரே வீட்டிலிருந்த சுமார் 40 பவுன் நகைகள் களவு போயுள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்னரே 28.03.2020 அன்று வின்ஸ்டன் அந்தோ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !