தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்ட
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. --------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.04.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இ...