தூத்துக்குடி மாவட்;டம் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊடக அறிவிக்கை (ஆநனயை டீரடடநவin) தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருவேளை கபசுர குடிநீர் விநியோகமும், கிருமிநாசினி தெளிப்பும், தூய்மைபணிகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றாநோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய மக்களை கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பு, பொதுமக்கள் முகக்கவசம் அணிதல்; வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத மக்களுக்கு அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமா...