முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 20, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில். மக்கள் குறை தீர்க்கும் நாள்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  அதன்படி இம்மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான இன்று (20.07.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 20 நபர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் நேரடியாக தெரிவித்;து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி. பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர். ஆய்வு .

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.07.2022) செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், கிராமப்புறங்களில் ஏழை எளிய மகளிர் மற்றும் சுய உதவிக்குழுவினரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டும், நீர் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆகாய தாமரையினை அகற்றிடும் விதமாகவும் கழிவு பொருளான ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை ஐதராபாத்தை சேர்ந்த கிரியேட்டிவ் பீ நிறுவனர் திருமதி.பீனா அவர்கள் வாயிலாக ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் ...