தூத்துக்குடி மாவட்டம் : சமூக பாதுகாப்புத்துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளைஞர் நீதி அமைப்பு குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் வெளியிட்டு, இளைஞர் பாதுகாப்புச்சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, அவ்வலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்பட்சத்தில் ‘சைல்டு ஹெல்ப் லைன் இலவச அழைப்பு எண். 1098க்கு தகவல் கொ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !