புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி துவக்கி வைப்பு : மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு .
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ------------------------- தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (03.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். ...