முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 1, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம்

  -----------------  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 என 18 பறக்கும் படைகளும், தலா 3 என 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும், தலா 2 12 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவில் உள்ள நீங்கள் பல்வேறு பதவிகளை வகித்தாலும் தற்போது நீங்கள் தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களாக உள்ளீர்கள். உங்களது பணி தேர்தல் காலங்களில் மிக அவசியமான பணியாகும். எனவே பணியின்போது மிகுந்த கவனத்துடன் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி செய்திட வேண்டும். உங்களது தொலைபேசி எண்கள் அனைத்தும் மாவட்ட அளவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ...