முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 21, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாசரேத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா

  தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாசரேத் திருவள்ளுவர் காலனி மற்றும் ரயில்வே நிலையம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு வேஷ்டிகள் மற்றும் இனிப்புகள்  வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு கழக பிரமுகர் பெரியதுரை, நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் துணைத் தலைவர் பிரபு,3 வது வார்டு செயலாளர் சரவணன், மோகன்ராஜ், நகர பொருளாளர் ராஜேந்திரன், செல்வராஜ், ஆதியப்பன், துரைசாமி, சிகாமணி,  ராமசாமி,சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு  12 வது வார்டு கவுன்சிலர் மற்றும்  வார்டு செயலாளர் ரவீந்திரன் செய்திருந்தார்.