பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர், வெள்ளகோவில், ஆறுமுகமங்கலம் பகுதியில் பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் --------------------- தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர், வெள்ளகோவில், ஆறுமுகமங்கலம் பகுதியில் பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு இன்று (26.05.2021) ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூர் பகுதி, வெள்ளகோவில் சுகந்தலை பகுதி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றின் காரணமாக ஒடிந்து சேதமடைந்த வாழைமரங்களை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள்; பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஏரல் வட்டம் ஆறுமகமங்கலம்...