முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 13, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் கோரிக்கை ஏற்று... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் அருகே ஆட்சியர் காரை வழி மறித்த பொதுமக்களால் பரபரப்பு ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து விட்டு பின்னர் செல்லும்போது நடுவக்குறிச்சி கிராம பொதுமக்கள் ஆட்சியர் காரை மறித்து தங்கள் பகுதியில் ரோடு வசதி குடிநீர் வசதி வாறுகால் வசதி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தனர் இதனால் புதியம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் பார்வையிட்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவும் வாறுகால் வசதி ரோடு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வட்டாட்சியர் காளிராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார் இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

கவிஞர் மாரிமுத்துவுக்கு பாராட்டு

                                        புதுவை தமிழ் சங்கம் சார்பில் அதன் 9ம் ஆண்டு விழா கடந்த 05-1-2019 அன்று  நடைபெற்ற அதன் 9ம் ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தூத்துக்குடியை சார்ந்த கவிஞர் மாரிமுத்து இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களை புதுவை கலை, மற்றும் பண்பாடுதுறை இயக்குனர் திரு.அ.கணேசன் அவர்கள் பராட்டி பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.                                பரிசு பெற்ற கவிஞர் மாரிமுத்து  அவர்களை "நமது எழுத்தாணி " அன்போடு வாழ்த்துகிறது.