தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ,மாவட்ட சிறுதொழில் சங்கம், மாவட்டம் தொழில் மையம் இணைந்து Entrepreneurs Clinic துவக்கம்
--------------------- தூத்துக்குடி ராம்நகர் துடிசியா அரங்கில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா), தூத்துக்குடி மாவட்டம் தொழில் மையம் இணைந்து Entrepreneurs Clinic துவக்க நிகழ்ச்சி இன்று (15.07.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பங்கேற்று Entrepreneurs Clinic சேவையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையியை வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடி துடிசியாவில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களுக்கு தொழில் தொடங்குவது என்பது ரத்தத்தில் ஊறியுள்ளது. வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்த மண் இது. கோவிட் 19 கொரோனா பாதிப்பால் தொழில் து...