முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 29, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

செ.வெ.எண்:45 நாள்: 26.01.2022 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் 95 பயனாளிகளுக்கு ரூ.51,42,453ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  ------------------- தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்; குடியரசு தின விழா நிகழ்ச்சி இன்று (26.01.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காவல்துறையில் 80 நபர்களுக்கு மெடல், 44 நபர்களுக்கு சான்றிதழ், கொடிந...