நட்டாத்தி ஊராட்சி பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டபணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
நாள்: 16.02.2022 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட முள்ளன்விளை, குமாரபுரம், பட்டான்டிவிளை ஆகிய பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி முள்ளன்விளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் இணைய வழி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதை பார்வையிட்டதோடு, மாணவிகளிடம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து கேட்டறிந்து சிறப்பான முறையில் வகுப்புகள் நடத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தின் அருகாமையில் உள்ள மகளிர் சுய உதவிக் கட்டிடத்தினை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ....