முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 7, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைப்பு

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தார்கள் ------------------------------- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை இன்று (07.12.2021) திறந்து வைத்தார்கள். அதன்பின்னர் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றினார்கள். மேலும் மரக்கன்று நட்டி வைத்தார்கள்.  புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 25 சென்ட்; (3230 சதுர அடி) பரப்பில் சுமார் ரூ.93.26 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பு அறை, சார்பதிவாளர் அறை, கணினி அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ சான்றிதழுக்கான அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், அவர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அறை, ஆண் மற்றும் பெண்களுக்கா...

சிவகாசி பகுதியில் குளங்கள் நிரம்புகின்றன.

விருதுநகர் மாவட்டம்    சிவகாசி, சாத்தூர்,   அதைச் சுற்றியுள்ள க பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையினால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது  இந்நிலையில்சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம்  கண்மாய் கடந்த  சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வருடம் பெய்து வந்த மழையினால் இந்த கண்மாய்  முழுவதுமாக  நீர் நிரம்பியுள்ளது  என்பது குறிப்பிடதக்கது    கரையோர பகுதிகள் உள்ள வீடுகள் நீரால் சூழப்பட்டு வருகிறது.இனி அடுத்தடுத்து மழை பெய்யும் நிலையில்  மழை வெள்ளத்தால்  பெரும் சிரமம்   ஏற்ப டுமோ என்று   அப்பகுதி மக்கள் அச்சத்தோடு இருப்பதாக கூறுகிறார்கள்