முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின்  பரிந்துரைகளின் படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகபாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால்  எளிதில் பாதிக்கக் கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தொடர் கண்காணிப்பு, முகக் கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.                                             ...

தூத்துக்குடியிலிருந்து. இயக்கப்படும். பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு

  தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.  தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி ஃ தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.  தூத்துக்குடியிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.   இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரம் திருநெல்வேலி அரசுபோக்குவரத்துக் கழக பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறையினருக்கு. கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்

          தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது.  பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திலுள்ள விருப்பமுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  அதன்படி அன்று (18.04.2021) தூத்துக்குடி மாநகர காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்க...